[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பிரியங்காவின் குடும்பத்தினருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நேரில் ஆறுதல்

hon-ble-governor-dr-tamilisai-soundararajan-visited-the-house-of-slain-dr-priyanka-reddy-and-consoled-the-bereaved-family-members

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட அரசு பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். 

ஐதராபாத்தில் உள்ள ஷம்சபாத்தில் உள்ள நட்சத்திரா நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கால்நடை மருத்துவரான இவர், கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்படும் பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக கொல்லூருக்குச் செல்வது வழக்கம். 

கடந்த 27ஆம் தேதி அவசர பணிக்காக மருத்துவமனை செல்ல சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்திருக்கிறார். 6 மணியளவில் அங்கு வண்டியை நிறுத்திவிட்டுச் சென்ற பிரியங்காவை, ஒரு கும்பல் நோட்டமிட்டது. மதுபோதையில் இருந்த அவர்கள், பிரியங்காவின் இருசக்கர வாகனத்தின் டயரை பஞ்சராக்கியுள்ளனர். இரவு ஒன்பது இருபது மணிக்கு சின்ஷபள்ளி சுங்கச்சாவடிக்கு வந்த பிரியங்கா, இருசக்கர வாகனத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வண்டி பஞ்சர் ஆகியிருப்பதால் அதை தள்ளிக் கொண்டு செல்ல முற்பட்டார். இதை வீட்டில் இருந்த தனது சகோதரிக்கு போனில் கூறியுள்ளார். தன்னை லாரி ஓட்டுநர்கள் 4 பேர் பின் தொடர்வதாகவும் பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மது போதை கும்பலைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முகமது அஷாவும், கிளீனர் சிவாவும் பிரியங்காவுக்கு உதவுவதாக கூறி ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் சின்னகேசவலு, நவீன் ஆகியோரும் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர், பிரியங்காவின் உடலை தார்பாயில் சுற்றி லாரியில் போட்டு எடுத்துச் கொண்டு கட்டபள்ளி என்ற இடத்தில் உள்ள பாலத்தின் அடியில் வைத்து நால்வரும் எரித்துள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி மற்றும் பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சியின் அடிப்படையில், அந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், எரித்துக் கொல்லப்பட்ட அரசு பெண் மருத்துவரின் குடும்பத்தினருக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அங்கிருந்த பிரியங்காவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close