[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

உத்தராகண்ட் இடைத்தேர்தல்: பாஜக வெற்றி

bjp-candidate-chandra-pant-wins-pithoragarh-by-election-seat-in-uttarakhand

உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் சந்திரா பன்ட் வெற்றிப் பெற்றுள்ளார். 

உத்தராகண்ட் மாநிலம் பித்தோராகர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த பிரகாஷ் பன்ட் உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாத 5-ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் பித்தோராகர் தொகுதி காலியாக இருந்தது. இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்றது. 

(சந்திரா பன்ட்) (பாஜக வேட்பாளர்)

இந்தத் தேர்தலில் பாஜக சார்பில், உயிரிழந்த பிரகாஷ் பன்ட்டின் மனைவியான சந்திரா பன்ட் போட்டியிட்டார். இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக வேட்பாளர் சந்திரா பன்ட், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஞ்சுவை 3267 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன்மூலம் பித்தோராகர் தொகுதியை பாஜக மீண்டும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close