தமிழகத்தில், கடந்தாண்டு நடைபெற்ற கார் விபத்துகள் மூலம் உயிரிழந்தோரில் 78 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கார் விபத்தில் சிக்குபவர்களில் 50% உயிர் பிழைக்கக் காரணம் சீட் பெல்ட் அணிவதுதான் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த வருடம் தமிழகத்தில் 24,671 பேர் கார் விபத்தில் சிக்கியதாகவும், அதில் 22,603 பேர் காயங்களுடன் தப்பித்துள்ளதாகவும் புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் 12,548 பேர் சீட் பெல்ட் அணிந்தவர்கள்.
சாலை விபத்து குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் கடந்தாண்டு 2 ஆயிரத்து 68 பேர் கார் விபத்துகளில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ஆயிரத்து 614 பேர் சீட் பெல்ட் அணியாதவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகளவில் ஏற்படாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சுமார் 11.7 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காரில் பயணிக்கும் மூன்றில் ஒரு குழந்தை சீட் பெல்ட் அணியாமல் இருப்பதாகவும், அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இருக்கைகளை பயன்படுத்தாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் அணியாததற்கு காரணம் என்ன?
தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
“வேட்பு மனுக்களை பெற வேண்டாம்”- ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
“சபரிமலை குறித்த தீர்ப்பு இறுதியானதல்ல” - உச்சநீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி