மகாராஷ்டிராவில் காங்கிரஸுக்கு 13 அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் பல அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் நாளை சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியேற்கிறார். இந்நிலையில் எந்தக்கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சிவசேவா கட்சிக்கு முதலமைச்சர் மற்றும் 15 அமைச்சர்கள் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் மற்றும் 13 அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன. காங்கிரஸுக்கு சபாநாயகர் மற்றும் 13 அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. ஆனால் இவை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்பட்டவில்லை.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்