[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மத்தியில் ஆட்சியை பிடித்தாலும் மாநிலங்களில் ஆட்சிகளை இழக்கும் பாஜக..?

maharashtra-setback-as-another-state-slips-out-of-bjp-s-hand-saffron-hues-shrink-from-india-s-map

மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக மாநில ஆட்சிகளை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளது. அதன் விவரத்தைப் தெரிந்துக்கொள்ளலாம்.

Image result for bjp states 2019

2017-ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்திஷ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தது. ஜம்மு காஷ்மீர், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதா இருந்தது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலான மாநிலங்களில் தனியாகவோ, கூட்டணியிலோ பாஜக ஆட்சியில் இருந்தது. 

Image result for amit shah modi

அதாவது, 2017 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த பரப்பில் 71 சதவிகித பரப்பளவில் மாநில ஆட்சியில் பாரதிய ஜனதா இருந்தது. ஆனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை ‌இழந்திருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் ஆட்சியை இழந்த அக்கட்சி, மகாராஷ்டிராவிலும் இப்போது ஆட்சியை இழந்துள்ளது. ஆந்திரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கூட்டணியை இழந்தது. மாறாக, கர்நாடகாவில் மட்டும் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 

Image result for amit shah modi

வடகிழக்கு மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி தக்கவைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாட்டின் மொத்த பரப்பில் பாஜக வசமுள்ள மாநில ஆட்சிகளின் பங்கு 40 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதனால், இந்திய வரைபடத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களும் பரப்பளவும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தாலும் மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சரிந்து வருவதே வரைபடம் கூறும் தகவலாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close