[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

supreme-court-orders-floor-test-in-the-maharashtra-assembly-to-be-held-on-november-27-before-5-pm

ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அவசர கதியில் ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆட்சியமைப்பதற்கான ஆதரவு க‌டிதம், குடிய‌ரசுத் ‌தலைவர் ஆட்சியை திரும்பப் பெறுவற்கு அளித்த பரிந்துரை கடிதம் ஆகிய இரண்டும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தரப்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

சிவசேனா, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆளுநரின் செயலர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை நாளை(இன்றைய தேதி) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாளை மாலை 5 மணிக்குள் ஃபட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கியம்சங்கள்:

  • இடைக்கால சபாநாயகர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
  • சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூட்டப்பட வேண்டும்
  • உறுப்பினர்கள் பதவியேற்பு நடத்த வேண்டும்
  • இடைக்கால சபாநாயகர் தலைமையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்
  • மறைமுக வாக்கெடுப்பு நடத்த கூடாது
  • நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலை செய்யப்பட வேண்டும்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close