[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ட்விட்டரில் காங். பதவிகளை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா - ம.பி காங்கிரசில் குழப்பம்? 

jyotiraditya-scindia-to-ani-on-no-mention-of-congress-party-in-his-twitter-bio

மத்திய பிரதேச துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 இடங்களில் பாஜக வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. இதில் மத்திய பிரதேசத்தில் 114 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 

அப்போது முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய் சிங் ஆகியோர் இருந்தனர். ஆனால் திக்விஜய் சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கமல்நாத்துக்கும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவியது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டார். 

மத்திய பிரதேச முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபோது சிந்தியா தனது ட்விட்டர் பயோவை மாற்றினார். அதன் பின்னர் ராகுல்காந்திக்கு மிக நெருக்கமானவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மத்திய பிரதேச துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், மத்திய பிரதேச துணை முதல்வர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பெயரை நீக்கியுள்ளார். மேலும், தான் ஒரு மக்கள் ஊழியர், கிரிக்கெட் ஆர்வலர் என்பது மட்டுமே ட்விட்டர் பயோவில் இடம்பெற்றுள்ளது. இதனால் மத்தியபிரதேச காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முன்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை பயோவில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் அரசியல் சார்ந்த அடையாளங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.

 

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் சிந்தியாவிடம் கேள்வி எழுப்பியபோது, “ஒரு மாதத்திற்கு முன் தனது ட்விட்டர் பயோவை மாற்றினேன். மக்கள் அறிவுறுத்தலை ஏற்று எனது பயோவை மேலும் சுருக்கினேன். இதுகுறித்த வதந்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை” எனத் தெரிவித்தார். 

இதற்கு முன்பு, காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக அரசின் நிலைப்பாட்டை ஜோதிராதித்ய சிந்தியா ஆதரித்திருந்தார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து வந்த போது அவர் திடீரென ஆதரித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close