[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு? : நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு 

ncp-congress-shiv-sena-petition-supreme-court-reserves-order-for-tomorrow-10-30-am

மகாராஷ்டிராவில் பாஜக அரசமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. 

மகாராஷ்டிராவில் பட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை இன்று நடைபெற்றது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, ஆளுநர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர். மிகவும் காரசாரமாக வாதங்கள் முன் வைக்கப்பட்டன. நீதிபதிகளும் பல கேள்விகளை எழுப்பினர்.

அனைத்து வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாளை காலை 10.30 மணி உத்தரவை பிறப்பிக்கின்றனர். இதனிடையே வாதாடிய பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘சபாநாயகரை தேர்வு செய்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 14 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளார்’ எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close