[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

no-power-can-stop-ram-temple-construction-in-ayodhya-rajnath

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் பிஸ்ராம்பூர் தொகுதியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். 

அப்போது உரையாற்றிய அவர், “அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியுள்ளது. அதேபோல ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நாங்கள் எந்தவித கால தாமதமும் இன்றி நீக்கியுள்ளோம். இதனால் தற்போது இந்தியாவில் ஒரே அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. அத்துடன் இந்தியாவில் ஒரே ஒரு பிரதமர் மட்டுமே இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close