தெலங்கானா மாநிலத்தில் அரசு பொறியாளர் ஒருவர் தான் லஞ்சம் வாங்குவதில்லை என்று அலுவலகத்தில் போர்டு ஒன்றை வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் கரீம் நகரிலுள்ள அரசின் மின் பகிர்வு நிலையத்தில் உதவி பொறியாளராக அசோக் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் தெலங்கானாவில் மிகவும் பிரபலமாகி உள்ளார். அதற்கு காரணம் இவர் தனது அலுவலகத்தில் வைத்த ஒரே போர்டு தான். அந்தப் போர்ட்டில் இவர் , ‘நான் லஞ்சம் வாங்குவதில்லை’ என எழுதி வைத்துள்ளார். இது அங்கு வரும் மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் ‘தி நியூஸ்மினிட்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னுடைய அலுவலகத்திற்கு தினசரி நிறையே பேர் வருகின்றனர். அவர்கள் தங்களது வேலைகளை முடிக்க லஞ்சம் தர தயாராக உள்ளனர். நான் அவர்களிடம் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகிறேன். இது தொடர் கதையாகவே நடக்கிறது. தினமும் வருபவர்களுக்கு ‘நான் லஞ்சம் வாங்கமாட்டேன்’ என பதில் கூறியே சோர்வாகி விட்டேன்.
ஆகவே என்னுடைய இருக்கைக்கு மேல் ‘நான் லஞ்சம் வாங்க மாட்டேன்’ என்று போர்டை வைத்துள்ளேன். நான் லஞ்சம் வாங்காததால் என்னை பலர் திட்டியுள்ளனர். அத்துடன் என்னுடன் பணிபுரியும் சக நண்பர்களும் என்னை திட்டியுள்ளனர். ஆனால் அவற்றை கருத்தில் கொள்வது இல்லை. நான் எப்போதும் ஊழலுக்கு எதிரானவன் என்பதை மக்களுக்கு காட்டவே இந்த போர்டை வைத்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்