ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங் (21). இவர் ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் 2014-ஆம் ஆண்டு இளநிலை சட்டப்படிப்பில் சேர்ந்தார். இந்த ஐந்து வருட படிப்பு, இந்த வருடம் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுதினார். இத் தேர்வை எழுத குறைந்தபட்சமாக 23 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த விதி, தளர்த்தப்பட்டு 21 வயதாகக் குறைக்கப்பட்டது.
இதனால் தனது 21 வயதில் இந்த தேர்வை எழுதிய சிங் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்றுள்ளார். விரைவில் அவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.
இதுகுறித்து சிங் கூறும்போது, “முதல் முயற்சியிலேயே நீதித்துறை தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. வயது குறைக்கப்பட்டதால்தான் என்னால் இத்தேர்வை எழுத முடிந்தது. நான் தேர்வாகி இருப்பதன் மூலம் அதிகமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்காக கடிமாக உழைப்பேன்” என்றார்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு