நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 3 கோடியே 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய சட்டத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் 3 கோடியே 14 லட்சத்து 53 ஆயிரத்து 555 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும் 23 லட்சத்து 90 ஆயிரத்து 715 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக 34 ஆயிரத்து 37 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் சுமார் 9 லட்சம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் லட்சக்கணக்கில் வழக்குகள் 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர, நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் 44 லட்சத்து 76 ஆயிரத்து 625 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தை பொறுத்தவரை சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு