[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

3 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு எஸ்.ஐ தற்கொலை!

puducherry-sub-inspector-suicide

புதுச்சேரி அருகே காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விபல்குமார்(36). புதுச்சேரி காவல்துறையில் 2011-ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். தற்போது இவர் புதுச்சேரி நெட்டபாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் காவல்நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் விபல்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் காவலர்கள் விபல்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது அறையில் இருந்து 3 பக்க கடிதத்தையும், டைரியையும் போலீசார் கைப்பற்றி தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close