[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

sc-to-hear-p-chidambaram-bail-petition-today

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான வழக்கை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள ப.சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துவிட்ட போதிலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகியுள்ளார். இம்மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தீர்ப்பில் உள்ள எழுத்துப்பிழைகளை திருத்த அந்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எழுத்துப்பிழைகளை திருத்தம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சிதம்பரம் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close