[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

இன்றைய முக்கியச் செய்திகள்..!

headlines-of-the-day

தமிழக மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் இணைந்து செயல்படத் தயார். ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரே நாளில் தனித்தனியாக பேட்டி

யார் இணைந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி. ரஜினி, கமல் இணைவது நல்லதுதான் என திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்து

மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்

தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு. உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேட்டி

சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு அறிவிப்பு

வரும் 29ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச. பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்.

2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தகுதி்ச் சுற்று போட்டி. ஓமனிடம் 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close