பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டுவை சணல் பைகளில் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் நாளொன்றுக்கு சராசரியாக 4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு சுமார் 70 ஆயிரம் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்காக நூறு சதவிகிதம் மறு சுழற்சி செய்யக்கூடிய அலுமினியம் ஃபாயில் (FOIL) உடன் கூடிய சணல் பைகளில் லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, திருப்பதி தேவஸ்தானம், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறுவனம் மற்றும் ஜூட் இந்தியா கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்