[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்?

now-yogi-adityanath-govt-plans-to-change-agra-s-name-to-agravan

ஆக்ராவின் பெயரை அக்ரவன் என மாற்ற உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ’இந்துஸ்தான் டைம்ஸ்’ உட்பட சில வெளிமாநில இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது ஆக்ரா நகரம். யமுனை ஆற்றின் கரையில் இருக்கும் இந்நகரில்தான், உலகப் புகழ்ப் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இது யுனெஸ்கோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நகரத்தின் பெயரை மாற்ற உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

அந்த மாநிலத்தில், முகல் சாராய் (Mughal Sarai) நகர், பண்டித தீனதயாள் உபாத்யாய் நகர் எனவும் அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும், ஃபைசாபாத்தை ஆயோத்யா என்றும் பெயர் மாற்றப்பட்டது. இப்போது ஆக்ரா பெயரையும் மாற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆக்ராவின் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உள்ள வரலாற்றுத் துறைக்கு உ.பி.அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

அதில், ஆக்ராவுக்கு இதற்கு முன் வேறு பெயர் ஏதும் இருந்திருக்கிறதா? வரலாற்றுப் பூர்வமாக அதற்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை இதுதொடர்பான ஆய்வில் இறங்கியுள்ளது. இத்தகவலை அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் சுகம் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘’எங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆய்வில் இறங்கியுள்ளோம். இருக்கிற தகவல்களை அரசுக்கு அனுப்புவோம். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது’ என்றார். 

ஆக்ராவுக்கு அக்ரவன் அல்லது அக்ரவால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close