கர்நாடகாவில் கல்குவாரி குட்டையில் குளித்த இளைஞர், அவரது நண்பர்கள் கண் எதிரிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டம் ஜாப் பரிதாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், அருகே மிஜ்குரி என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். நண்பர்கள் நீரில் நீச்சலடித்ததை அவர்களில் ஒருவர் செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். அதில் முதலில் நீந்திய இளைஞர் கரையேறிவிட, அடுத்து ஜாபர் என்பவர் நீரில் குதித்து நீந்தினார்.
கரைக்கு அருகே வரும்போது சமநிலை தவறியதால், ஜாபர் நீந்த முடியாமல் மூழ்கத் தொடங்கினார். இதனை உணராத நண்பர்கள், ஜாபர் விளையாடுவதாக நினைத்துக் கொண்டனர். அவர் நீரில் மூழ்குவதை உணராமல், நண்பர் ஒரு அதனை செல்போனில் படம்பிடித்தார். இந்த விளையாட்டுத் தனத்தால், ஜாபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து மிஜ்குரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் நீரில் மூழ்கிய செல்போன் காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்