[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

பஞ்சாப் எம்எல்ஏவை கரம்பிடிக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங்..!

up-congress-mla-aditi-singh-to-marry-party-colleague-from-punjab

ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதன் வாயிலாக பிரபலமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏவை கரம் பிடிக்கிறார். 

அதிதி சிங், கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலில் களம் கண்டு, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அதில், 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அங்கத் சைனிக்கிற்கும் வரும் 21-ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது. 

பிரியங்கா காந்திக்கு மிகவும் நெருக்கமானவரான அதி‌தி சிங், பல சர்ச்சைக்குரிய சம்பவங்களால் பிரபலமடைந்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதற்கு அதிதி சிங் ஆதரவு தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பார‌திய ஜனதா அரசு நடத்திய சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக காங்கிரஸ் கட்சி அதிதிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close