பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணையை வாங்க மறுத்த எல்லை பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சல் செகாவத் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அப்போது மணமகளின் தந்தை மணமகன் கையில் 11 லட்சம் ரூபாயை வரதட்சணையாகக் கொடுத்தார். ஆனால், அதை சிங் ஏற்க மறுத்தார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண ஏற்பாட்டில் குறை ஏதும் வைத்துவிட்டதற்காக, இப்படி செய்கிறார்களோ என்று வருந்தினர்.
ஆனால், ஜிதேந்திர சிங், ‘வரதட்சணை வாங்கக் கூடாது என்பது என் பாலிசி, வெறும் 11 ரூபாயும் ஒரு தேங்காயும் மட்டும் கொடுங்க’ என்று வாங்கிக்கொண்டார். இதையடுத்து திருமண வீடு மகிழ்ச்சியால் நிறைந்தது.
இதுபற்றி ஜிதேந்திர சிங் கூறும்போது, ’’சஞ்சல், சட்டப் படிப்பில் பிஎச்டி படித்துவருகிறார். எனக்கும் என் குடும்பத்துக்கும் அது போதும் என்று நினைத்தேன். சஞ்சல் படிப்பை முடித்தபின், நாளை மாஜிஸ்திரேட் வேலைக்குச் சென்றால், அது பணத்தை விட எனக்கு பெரிய விஷயம்தானே’’ என்றார்.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்