[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பிச்சைக்கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டல்: 60 வயது முதியவர் கைது

disturbing-video-of-a-man-caught-molesting-a-6-year-old-beggar-child-in-cp

டெல்லியில் பிச்சை எடுத்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியின் கன்னாட் பகுதியில் 6 வயது சிறுமி ஒருத்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அவரிடம் 60 வயதான முதியவர் ஒருவர்  பாலியல் சீண்டல் செய்துள்ளார். சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், இதனை நேரில் கண்ட ஒருவர் முதியவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நபர், ''அந்த நபருக்கு 60 வயது இருக்கும். நான் என் நண்பர்களுடன் கன்னாட் பகுதியில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது அந்த நபர் சிறுமியை கட்டாயப்படுத்தி முத்தமிட முயன்றார். சிறுமியின் அந்தரங்க பாகங்களையும் தொட்டுக்கொண்டு இருந்தார்.

சிறுமிக்கு 6 வயதே இருக்கும். அவர் அப்பகுதியில் பிச்சையெடுத்துக்கொண்டு இருக்கிறார். சிறுமி அழுதுகொண்டு இருந்தார். நான் அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தேன். அந்த சிறுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறுமி என்னைப்பார்த்து அழுத கணத்தையும், அந்த ஏதும் அறியாத கண்களையும் என்னால் மறக்கமுடியவே இல்லை'' என தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close