காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடையே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று சிவசேனா உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவு வந்து 19 நாட்கள் ஆகியும் யாரும் ஆட்சி அமைக்காததால் தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு இன்னும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“பாஜக-சிவசேனா கூட்டணி இத்தனை ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தற்போது அது முறிந்துள்ளது. தற்போது நாங்கள் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இது தொடர்பாக இந்த இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் சாவந்த்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர் அமைச்சர் பதவி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருப்பார்கள், ஆனால் அரவிந்த் சாவந்த் அந்த மாதிரி இல்லை. ஆகவே தான் நான் அவரை கண்டு பெருமைபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்