[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

ஆளுநர் அவகாசம் தரவில்லை : உச்சநீதிமன்றத்தில் சிவசேனா மனு

shivsena-filed-petition-in-supreme-court-for-majority-time

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநர் உரிய அவகாசம் தரவில்லை என சிவசேனா கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் என எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகப் பெரும்பான்மை பெற்ற கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு ஆளுநர் அவகாசம் விடுத்தார். அவர்கள் பெரும்பான்மை இல்லை என அதனை நிராகரித்தனர். இதைத்தொடர்ந்து சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரை சந்தித்த சிவசேனா தலைவர்கள் மூன்று நாட்கள் அவகாசம் கோரினர். ஆனால் அவகாசம் தர ஆளுநர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநர் உரிய அவகாசம் தரவில்லை என சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிவசேனா சார்பில் தாக்கல் செய்தார். மனுவை தலைமை நீதிபதி அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க முறையிடவும் சிவசேனா தரப்பு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close