[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து

two-trains-have-collided-at-kacheguda-railway-station-in-hyderabad

ஐதராபாத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள கச்சிகுடா ரயிவே ஸ்டேஷன் அருகே இன்று காலை, இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலும் புறநகர் ரயிலும் ஒரே பாதையில் எதிர் எதிரே வந்தன. திடீரென இந்த ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் புறநகர் ரயிலில்  பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


'2 வது பிளாட்பாரத்தில் ஏற்கனவே ஒரு ரயில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த பாதையில் மற்றொரு ரயில் செல்ல சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் புறநகர் ரயிலின் என்ஜின் சேதமடைந்தது. அதன் டிரைவர் சேகர் படுகாயமடைந்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close