[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஃபட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு 

maharashtra-governor-bhagat-singh-koshyari-has-invited-the-single-largest-party-bjp-to-form-the-government

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும் அரசியல் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Image result for ஃபட்னாவிஸ் ஆளுநர்

இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநரை தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்தித்து பேசினார். இதையடுத்து தனது முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள கட்சி என்பதால், பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close