[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி

thank-pak-pm-imran-khan-niazi-pm-modi-speech-on-historic-kartarpur-opening

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான குர்தாஸ்பூர் - கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திறப்பு விழாவில், இந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

Image result for modi kartarpur imran khan

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், தனது இறுதிக்காலத்தை தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட கர்தார்பூரில் கழித்ததாகக் கூறப்படுகிறது. குருநானக் நினைவாக கர்தார்பூரில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தர்பார் சாகிப் என்ற பெயரில் குருத்வாரா நிறுவப்பட்டது. 

Image result for modi kartarpur imran khan

குருத்வாராவிற்கு சீக்கியர்கள் பயணம் மேற்கொள்ள விசா வாங்கிச் செல்வதில் சிரமங்கள் இருந்து வந்ததால், கர்தார்பூர் வழித்தடம் அமைக்க இருநாடுகளிடையே முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்கிலிரிந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 12ஆம் தேதி குருநானக்கின் 550ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

Image result for modi kartarpur imran khan

இதையொட்டி, கர்தார்பூர் வழித்தடத்தை தேரா பாபா நானக்கிலிருந்து பிரதமர் மோடியும், கர்தார்பூர் குருத்வாராவிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் திறந்து வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் நம்பிக்கைக்கு‌ மதிப்பளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். கர்தார்பூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு இன்றும், வரும் 12ஆம் தேதியும் கட்டணம் வசூலிக்கப்படாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. கர்தார்பூர் வழியாக நாள்தோறும் 5 ஆயிரம் யாத்ரீகர்களை அனுமதிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close