[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: தலைமை நீதிபதி

supreme-court-to-delivering-judgment

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் கொடுக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோரை கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. அனைத்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினர். 


சன்னி பிரிவுக்கு ஷியா வக்ப் வாரியம் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
தலைமை நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். தீர்ப்பில் அவர் கூறியதாவது:

. 1857-க்கு முன் வரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டிடத்தில் வழிபட தடை இல்லை.

 1857-ல் கட்டிடத்தின் உள் பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்கள் இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. 

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.
இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும்.

பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது

இறையியல் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதல்ல

ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

மசூதியில் 1949-ம் ஆண்டில் சிலைகள் வைக்கப்பட்டன.

மதச்சார்பின்மையே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை ; அதன்படியே உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது

தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது

தொல்லியல் துறை ஆதாரங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை

பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை

அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் கருதுகிறார்கள். அதை மறுக்க முடியாது.

அதே இடத்தை இஸ்லாமியர்கள் பாபர் மசூதி என்று அழைக்கிறார்கள்.

ஆவணங்களின் படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது

மத நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனின் அடிப்படி உரிமை

பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடம் இஸ்லாம் முறைப்படி இல்லை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Supreme Court
Advertisement:
Advertisement:
[X] Close