[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்

‘இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும்’ - ரேட்டிங்கை குறைத்த மூடீஸ் நிறுவனம்

moody-s-lowers-india-s-outlook-to-negative-from-stable

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட மிகவும் குறையும் என்பதால் இந்தியாவிற்கான ரேட்டிங்கை மூடீஸ் முதலீடு சேவை நிறுவனம் குறைத்துள்ளது.  

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தி துறை, வாகனத் துறை உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி குறைந்துள்ளது. அதேபோல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக பதிவாகும் என்று சில சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளன. 

இந்நிலையில் பிரபல மூடீஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை குறைத்துள்ளது. அதாவது இந்தியாவின் ரேட்டிங்கை  ‘ஸ்டேபிள்’(Stable) என்ற இடத்திலிருந்து ‘நெகடிவ்’ (Negative) இடத்திற்கு குறைத்துள்ளது. இதற்கு தற்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 சதவிகிதமாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close