இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட மிகவும் குறையும் என்பதால் இந்தியாவிற்கான ரேட்டிங்கை மூடீஸ் முதலீடு சேவை நிறுவனம் குறைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக உற்பத்தி துறை, வாகனத் துறை உள்ளிட்ட பல துறைகளில் வளர்ச்சி குறைந்துள்ளது. அதேபோல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. வரும் மாதங்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக பதிவாகும் என்று சில சர்வதேச நிறுவனங்கள் கணித்துள்ளன.
இந்நிலையில் பிரபல மூடீஸ் முதலீட்டு சேவை நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ரேட்டிங்கை குறைத்துள்ளது. அதாவது இந்தியாவின் ரேட்டிங்கை ‘ஸ்டேபிள்’(Stable) என்ற இடத்திலிருந்து ‘நெகடிவ்’ (Negative) இடத்திற்கு குறைத்துள்ளது. இதற்கு தற்போது இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக தெரிவித்துள்ளது. அத்துடன் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது. ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 5 சதவிகிதமாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்
கருணை மனுவை திரும்ப பெறுவதாக நிர்பயா குற்றவாளி அறிவிப்பு
போக்குவரத்து விதிமீறல்: கோவையில் மட்டும் ரூ.2.9 கோடி அபராதம் வசூல்!