[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் - வேல்முருகன்
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி
  • BREAKING-NEWS வெப்பச் சலனத்தால் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த ராஜபக்ச
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்

சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்.. Mastodon பக்கம் படையெடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்..!

social-network-mastodon-is-trending-in-india-should-twitter-worry

சமீப காலமாக ஃபேஸ்புக், ட்விட்டர் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் சமூக வலைத்தளவாசிகளின்  Mastodon பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது

சமூக வலைத்தளவாசிகள் அதிகம் பயன்படுத்தும் தளங்களாக இருப்பது ஃபேஸ்புக், ட்விட்டர். இந்த இரண்டுமே சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது. ஃபேஸ்புக் பயனர்களின் தரவுகள் உளவு பார்க்கப்படுவதாக அடிக்கடி சர்ச்சை எழுவது உண்டு. இது ஒருபுறம் இருக்க சமீபத்தில் ட்விட்டர் மீதும் புகார் எழுந்தது. அதாவது ட்விட்டர் நிறுவனம், பாகுபாடு காட்டுவதாக அதன் பயனர்கள் குற்றம்சாட்டினார்.

பட்டியலினத்தை சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களின் கணக்குகள் மட்டுமே சரிபார்க்கப்பட்டு புளூ டிக் வழங்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ட்விட்டர் நிறுவனமே விளக்கம் அளித்தது. அதாவது எங்கள் கொள்கைகளில் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை என தெரிவித்தது. அதேபோல எந்தவொரு சித்தாந்த சார்பிலும் அரசியல் பார்வையிலும் செயல்படுவதில்லை என விளக்கம் கொடுத்தது. இருப்பினும் ட்விட்டர் மீது பலர் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வந்தனர்.

இதுமட்டுமில்லாமல் வாட்ஸ் ஆப் தரவுகளும் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்  சமூக வலைத்தளவாசிகளின் பக்கம் Mastodon பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. Mastodon என்பதும் ஒரு சமூக வலைத்தள பக்கம்தான். ட்விட்டரில் பயனர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்னைகள் இங்கு கிடையாது என அந்நிறுவனமே கூறுகிறது.

அதாவது ட்விட்டரில் ஒருவரை மற்றொருவர் கேலி, கிண்டல்கள் செய்வது கொடிகட்டி பறக்கும். சிலர் தொடர்ச்சியாக குறிப்பிட்ட நபர்களை பற்றி அவதூறு செய்வதும் உண்டு. அதுபோன்ற கணக்குகளை முடக்குங்கள் என ட்விட்டர் நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கும்போது, மாதக் கணக்காகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.

ஆனால் நீங்கள் ஒரு புகார் தெரிவித்தால் அதற்கு தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என Mastodon கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் எங்களிடம் இருக்கும் உங்கள் தரவுகள் எந்தவகையில் உளவு பார்க்கப்படாது என Mastodon உறுதியுடன் சொல்கிறது. வணிக ரீதியான விளம்பரம், புரோமோஷன்ஸ் உள்பட எதற்கும் நாங்கள் அனுமதி கொடுக்க மாட்டோம் என Mastodon கூறுகிறது. ஏற்கெனவே ட்விட்டர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பலரும் தங்களது கவனத்தை தற்போது Mastodon பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close