[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

''என் பரிசுத்தொகையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவேன்'' - பள்ளி மாணவனின் பெருந்தன்மை!

take-my-prize-money-for-school-wall-student

விநாடி வினா போட்டியில் தான் வென்ற பரிசுத்தொகையை பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட உதவுவேன் எனக் கூறிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கட்டாயாவில் உள்ள அரசுப்பள்ளியில் 10வகுப்பு படித்து வரும் மாணவர் தேஜாஸ். அவரது அப்பா ஒரு விவசாயி. அவரது அம்மா, அரசுப்பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பணியாளராக இருக்கிறார். தன் அத்தை வீட்டில் இருந்து படித்து வரும் தேஜாஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விநாடி வினா போட்டியில் பங்கேற்றார். அதில் கேட்கப்பட்ட 15 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு அவர் பதிலளித்து ரூ.6.4 லட்சம் பரிசுத்தொகையை பெற்றார். 

(மாணவர் தேஜாஸ்)

பரிசுத்தொகையை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ''இந்த பணத்தில் என் அக்காவுக்கு திருமணம் செய்வேன். என் மேல் படிப்புக்கு வைத்துக்கொள்வேன் என்று கூறினார். அதோடு மட்டும் நிறுத்தாமல் என் பள்ளியில் நடும் மரங்களை எல்லாம் கால்நடைகள் தின்றுவிடுகின்றன. மரங்களை காவல் காப்பது கடினமாக இருக்கிறது. அதனால் இந்த பணத்தை வைத்து பள்ளியைச் சுற்றி சுற்றுசுவர் கட்டுவேன்'' எனக் கூறினார். மேலும் ''எவ்வளவு செலவாகும் எனத் தெரியாது. ஆனால் ஆசிரியர்கள் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பேன்'' எனவும் தெரிவித்தார். 

தேஜாஸின் இந்த பெருந்தன்மை அனைவரையும் கவர்ந்தது. இந்த செய்தி கல்வி அமைச்சர் வரை சென்றது. இது குறித்து பேசிய கல்வி அமைச்சர், ‘தேஜாஸுக்கு பாராட்டுகள். அவர் வென்ற பணத்தை அவர் தனது கல்விக்காகவே பயன்படுத்திக் கொள்ளலாம். அரசே உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தேஜாஸ், ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமைச்சரின் அறிவுரைபடியே நடந்துகொள்வேன். சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close