[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

பாசக் கடிதத்துடன் குழந்தையை விட்டுச் சென்ற திருமணமாகாத பெண்

why-a-kerala-woman-was-arrested-for-abandoning-her-baby-despite-cradle-baby-scheme

கேரளா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையை ஒரு மதராசா பள்ளிக்கு வெளியே விட்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடுவிற்கு அருகே உள்ள திருவன்னூர் பகுதியிலுள்ள மதராசா பள்ளிக்கு வெளியே கடந்த 28ஆம் தேதி குழந்தை ஒன்று கண்டு எடுக்கப்பட்டது. இந்தக் குழந்தை இருந்த துணியில் ஒரு காகிதம் இருந்தது. அதில், “இந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தை அல்லாவிடம் இருந்து வந்த பரிசாக நினைத்து பார்த்து கொள்ளுங்கள். மேலும் இந்தக் குழந்தைக்கு அனைத்து வகை தடுப்பு ஊசிகளையும் போட்டு விடுங்கள்” என எழுதப்பட்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தக் குழந்தையின் தாய் ஒரு 21 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் திருமணமாகவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தக் குழந்தை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு இந்தக் குழந்தை தற்போது அரசின் குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மையங்கள் உள்ளது. அந்த மையங்களில் விட்டுச் செல்லாமல் வெளியே பள்ளிக்கு அருகில் விட்டுச் சென்ற காரணத்திற்காக அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close