[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

“புதிய அரசை விரைவில் அமைப்போம்” - அமித் ஷா சந்திப்புக்குப் பின் ஃபட்னாவிஸ்

maharashtra-needs-govt-soon-says-devendra-fadnavis-after-meeting-amit-shah-in-delhi

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய அரசை விரைவில் அமைப்போம் என்று அமித் ஷா சந்திப்புக்குப் பின் அம்மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. பாரதிய ஜனதாவை புறந்தள்ளும் வகையில் தனித்து ஆட்சி அமைக்க தங்களுக்கு 170 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு இருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் 50-க்கு 50 என்ற திட்டத்தை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகவே ஆட்சி அமைப்பது தொடர்பாக ஃபட்னாவிஸ் ஏதேனும் அறிவிப்பார் என பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

இச்சந்திப்பை முடித்து விட்டு வந்த ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நானோ அல்லது பாஜகவை சேர்ந்தவர்களோ யாருமே உலவிக் கொண்டிருக்கும் ஊகங்களுக்கு எதிர்வினையாற்ற மாட்டோம். மகாராஷ்டிராவில் விரைவில் ஆட்சி அமைப்போம். நாங்கள் நிலத்தில் புதிய அரசை அமைப்போம் என்று முற்றிலும் உறுதியாக உள்ளோம்” என்று கூறியுள்ளார். ஆனால் இவர் எப்படி ஆட்சி அமைக்கப் போகிறோம் என்ற விவரங்கள் குறித்து எதையும் தெரிவிக்கவில்லை. இவரின் பேச்சால் பாஜகவினர் புதிய நம்பிக்கையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close