[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை
  • BREAKING-NEWS உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழிப்பு
  • BREAKING-NEWS ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

மறுமணத்துக்கு வற்புறுத்திய அம்மாவை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகள்!

delhi-woman-arrested-for-killing-mother-81-with-rod-after-fight

மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய அம்மாவை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகள் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள ஹரிநகரைச் சேர்ந்தவர் நீரு பஹா (47). மின்சார வாரியத்தில் உதவி தனி அதிகாரியாக பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்த இவர், தனது அம்மா சந்தோஷ் பஹாவுடன் வசித்து வந்தார். கணவரை பிரிந்ததால் அம்மா, நீருவை குறை கூறிகொண்டே இருந்தாராம். அவதூறாகவும் பேசினாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும். பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்படியும் அம்மா கூறியிருக்கிறார். மறுத்து வந்தார், நீரு. இதனாலும் இருவருக்கும் தினமும் பிரச்னை.

கடந்த சனிக்கிழமையும் இதே போல சண்டை நடந்திருக்கிறது. ஆத்திரமடைந்த நீரு, வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியால் அம்மாவைத் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் நீரு.
தகவல் கிடைத்து வீட்டுக்குச் சென்ற போலீசார், சந்தோஷியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

பின்னர் நீருவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அம்மாவைக் கொன்றதை அவர், ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close