மத்திய அரசின் சிறப்பு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஜினிக்கு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் தலைசிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். தனக்கு இந்த விருதை அறிவித்ததற்காக மத்திய அரசுக்கு பதிலுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விருது அறிவிப்பு குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததற்காக ரஜினிக்கு இந்த விருது கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளார். 'படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா' எனவும் ரஜினிக்கே உரித்தான ரைமிங் உடன் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக விஜயகுமார் நியமனம்
“பருவநிலை மாற்றங்களால் பறவைகளின் உடலமைப்பில் மாற்றம்”-ஆய்வில் தகவல்
“போலீஸ் செய்தது சரியே.. ஆனாலும்...?: தெலங்கானாவில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்களின் குடும்பம்..!
ஆளுநர் பதவியா..? அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஆதரிப்பது ஏன்..? - முத்தையா முரளிதரன் பேட்டி
உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்: மாநில தேர்தல் ஆணையர்..!