[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

"மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்து யாருடனும் விவாதிக்கவில்லை" - மல்லிகார்ஜுன கார்கே

malligarjun-kharge-speech-about-maharastra-election

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக யாருடனும் விவாதிக்கவில்லை, என காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரத்துக்கு மேல் ஆகியும் பெரும்பான்மையை பெற்ற பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா இன்னும் ஆட்சியை அமைக்கவில்லை. யார் முதல்வராவது என்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடிக்கிறது.

Image result for சிவசேனா பாஜக

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும் என தகவல் வெளியானது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக யாருடனும் விவாதிக்கவில்லை என்றார். மேலும், எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கே மக்கள் தங்களுக்கு வாக்களித்திருப்பதாகவும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close