[X] Close
JUST IN

உதவும் கைகளை ஒன்றுசேர்க்க 'டைம் பேங்க்' திட்டம்: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

madhya-pradesh-set-to-have-country-s-first-time-bank

'உதவி செய்து விட்டு பெயரை பதிவு செய்துகொண்டால் தேவைப்படும் போது உங்களுக்கும் உதவி கிடைக்கும்' என்ற புதிய யோசனையை மத்திய பிரதேச அரசு திட்டமாக செயல்படுத்தவுள்ளது.

மத்திய பிரதேச அரசு ‘டைம் பேங்க்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆணையை அம்மாநில ஆன்மிகத் துறை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ளது. ஒவ்வொரு மாவட்ட தலைமையிடத்திலும் ‘டைம் பேங்க்’ என்ற அமைப்பு செயல்படும். இது ஒரு வங்கியைப்போலவே மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உதவி மனப்பான்மையை அதிகரிக்கவும், சமூக சேவை எண்ணத்தை வளர்க்கவும் இந்த ‘டைம் பேங்க்’ திட்டம் உதவும் என கூறப்படுகிறது.

அதாவது சமூக சேவை செய்ய விரும்புவர்களோ அல்லது தனிப்பட்ட மனிதருக்கு உதவ விரும்புவர்களோ தங்களது உதவியை செய்து விட்டு அது தொடர்பான விவரத்தை டைம் பேங்கில் பதிவு செய்யலாம். எதாவது ஒரு சமயத்தில் உதவி செய்தவருக்கே உதவி தேவைப்படும். அப்போது அவருக்கு உதவி பதில் உதவி சென்றடையும் என கூறப்பட்டுள்ளது. 

உதவி செய்தவர்களை மறக்காமல் இருக்கவும், உதவிகள் கைகோர்த்து சென்று கொண்டே இருக்கவும் இந்த திட்டம் பயன்படும் என கூறப்படுகிறது. முதியோர் இல்லத்திற்கு உதவி, ஏழை குழந்தைகளுக்கு பாடம் எடுத்தல், தோட்டம் வளர்ப்பு என எல்லாவற்றையும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது ஆரம்ப கட்ட திட்டம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதால் திட்டம் முழுமையாக எப்படி செயல்படும் என்ற முழு விவரம் விரைவில் மக்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்படும் என மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close