[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மொழிவாரி மாநிலம்: கேரளா, கர்நாடகாவுக்கு பிரதமர் வாழ்த்து

the-linguistic-division-of-states-in-india

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டது சம்பந்தமாக கேரளா, கர்நாடகாவுக்கு வாழ்த்து தெரித்துள்ளார். 

1956-ஆம் ஆண்டு இதே நாளில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 63 ஆண்டுகள் ஆன நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதி ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்படும் என்று கடந்த ஜூலை மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நாளை கொண்டாட பத்து லட்சம் நிதியை ஒதுக்கி கடந்த 21-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

மொழிவாரி மாநிலங்கள் அமைந்த தினத்தை முன்னிட்டு கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேச மாநிலங்களின் பங்களிப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், தேச வளர்ச்சியில் இந்த மாநிலங்களின் பங்களிப்பு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார். 

கேரளாவின் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், மக்கள் மேலும் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் பெற வாழ்த்துவதாக கூறியுள்ளார். 1956 நவம்பர் ஒன்றாம் தேதி கேரளாவும் தமிழ்நாடும் மொழிவாரி மாநிலங்களானது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close