[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

“அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க வேண்டும்” - ராஷ்டிரீய ஸ்வயம்சேவாக் சங் 

rasriya-shvayamsevak-sangh-statement-about-ayodhya

அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்க வேண்டும் என ராஷ்டிரீய ஸ்வயம்சேவாக் சங் தெரிவித்துள்ளது.

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றம் வரும் நவம்பர் 17-ஆம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுவதால், இதன் தீர்ப்புக்காக ஒட்டுமொத்த நாடே காத்திருக்கிறது.

இந்நிலையில், ராஷ்டிரீய ஸ்வயம்சேவாக் சங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “இன்னும் சில நாட்களில் ராமஜென்ம பூமி நிலம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அதை திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீர்ப்பிற்கு பிறகு நாட்டின் சூழலை அமைதியான முறையில் பாதுகாப்பது ஒவ்வொருவருடைய பொறுப்பு ஆகும். 

இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஹரித்துவாரில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது அந்தக் கூட்டம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹரித்துவாருக்கு பதிலாக அந்தக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close