[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

ஹரியானா முதல்வராக மனோகர் லால் கட்டார் இன்று பதவியேற்பு

manohar-lal-khattar-to-take-oath-as-haryana-cm-today

ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக மனோகர் லார் கட்டார் இன்று பதவியேற்கிறார். ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமைகோரி பாரதிய ஜனதா ‌- ஜனநாயக ஜனதா கட்சிகளின் தலைவர்கள் ஆளுநர் சத்யதியோ நரைன் ஆர்யாவை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக புதிய அரசு அமைக்க வரும்படி, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்  முதலமைச்சராக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா இன்று மதியம் 2.15 மணிக்கு நடைபெறுகிறது.

புதிய முதலமைச்சராக மனோகர் லால் கட்டாரும், துணை முதலமைச்சராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்க உள்ளனர். 

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா 40 தொகுதிகளையும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும் கைப்பற்றின. இதுதவிர மேலும் ஏழு சுயேச்சை எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதா தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close