[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

காதலிகளுக்கு அன்பளிப்பு வழங்க ஐபோன் திருடிய இளைஞர்கள்

delhi-man-robs-delivery-boy-to-present-expensive-gifts-to-girlfriend

தங்களுடைய காதலிகளுக்கு அன்பளிப்பு வழங்குவதற்காக ஐ போன் திருடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த வியாழக்கிழமை டெல்லியில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு, ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை வழங்குவதற்காக டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அவரை வழி மறித்த ஷாஷாங் அகர்வால்(32) மற்றும் அமர் சிங்(29)ஆகியோர் டெலிவரிக்கு சென்ற இளைஞரிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களை வழிப்பறி செய்தனர். 

இது குறித்து தெரிவித்துள்ள காவல் அதிகாரி, ''ஷாஷாங் அகர்வால், அமர் சிங் ஆகியோர் ஏற்கெனவே டெலிவரி செய்யும் வேலை பார்த்தவர்கள்.  தீபாவளி நேரத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஆர்டர் செய்யப்படும் என்பதை ஏற்கெனவே அறிந்த அவர்கள், இளைஞரை குறிவைத்து பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். தங்களுடைய காதலிகளுக்கு கொடுப்பதற்காக ஐபோன் 11 போன்ற பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர். 

தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழிப்பறிக்கு உதவிய மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வழிப்பறி செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்'' என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close