[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் நிதின் கட்கரி

nitin-gadkari-to-visit-the-united-states

மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒருவார கால சுற்றுப்பயணமாக நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.

இந்திய கட்டமைப்புத் துறையில் புதிதாக பல ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு அன்னிய முதலீடுகளை திரட்டுவதே அவரின் இந்தப் பயணத்தின் நோக்கமாகும். வாஷிங்டன், செயின்ட் லூயிஸ், லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் கட்கரி, அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அமைச்சர் ஆன்ட்டனி ஃபாக்ஸ் உடன் பேச உள்ளார். இந்தியாவில் நெடுஞ்சாலைகள், நீர் வழிப் ‌பாதைகள், துறைமுகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து அமெரிக்க தொழிலதிபர்களுக்கு விளக்கப்பட உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close