வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநில தலைமை பாஜக அலுவலகத்தில் இனிப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில தலைமை பாஜக அலுவலகத்தில் இனிப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 235 பெண்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் பாஜகவும், சிவசேனாவும் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின.
பாஜக152 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், காங்கிரஸ் - 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் - 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக அதிக இடங்களை பிடித்து அபார வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?