மத்திய அரசுக்கு எதிராக தான் செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயற்சி செய்கின்றன என்று பிரதமர் மோடி தம்மிடம் நகைச்சுவையுடன் கூறியதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அபிஜித் பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட மோடி, அனைத்து தரப்பினருக்கும் அதிகாரம் அளித்தல் மீதான ஆர்வம் அபிஜித்திடம் தெளிவாகக் காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். பல்வேறு துறைகள் குறித்து ஆரோக்கியமான மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் பிரதமர் பதிவிட்டிருந்தார்.
அபிஜித்தின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டிருந்த மோடி, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடியின் சிந்தனை மிகவும் தனித்துவமானது என பாராட்டினார். மேலும், பிரதமர் மோடி ஒரு நகைச்சுவையை கூறி என்னிடம் பேசத் தொடங்கினார். ஊடகங்கங்கள் பிரதமருக்கு எதிராக நான் இருக்கிறேன் என்று என்னை சிக்கவைக்க முயற்சி செய்கின்றன என்று மோடி நகைச்சுவையுடன் கூறினார். பிரதமர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார், உங்களையும் கவனித்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும்.
“குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” - 5 மாநில அரசுகள் போர்க்கொடி
50 நாட்களை நிறைவு செய்த ‘பிகில்’, ’கைதி’ - ரசிகர்களுக்கு இயக்குநர் நன்றி
சாய்ந்த 50 ஆண்டுகள் பழமையான மரம் - மீண்டும் அழகாக நட்டு வைத்த அதிகாரிகள்
பாலியல் வன்கொடுமைக்கு 21 நாட்களுக்குள் தூக்கு - ஆந்திர பேரவையில் நிறைவேறியது திஷா மசோதா
அசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு?