[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் கும்பல்: வீடியோ வெளியிட்ட போலீசார்!

robbers-loot-led-tvs-from-a-godown-in-bihar

குடோனில் இருந்து முகமூடி அணிந்த கொள்ளையர்கள், எல்இடி டிவிக்களை கொள்ளையடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

பீகாரில் உள்ள மெஹந்திகன்ச் பகுதியில் டி.வி விற்பனை செய்யும் கடை ஒன்றின் குடோன் உள்ளது. இங்கு பல்வேறு நிறுவனங்களின் எல்இடி டிவிக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கு வேனுடன் வந்த சில கொள்ளையர்கள், சில டிவிக்களை அப்படியே எடுத்து வேனில் ஏற்றி, கொள்ளையடித்துச் சென்றனர். மறுநாள் குடோனுக்கு சென்ற பார்த்த அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்ததில், அதில் சிலர் டிவிக்களை தூக்கிச் செல்வது தெரிந்தது.

இதுபற்றி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close