[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா

காந்தி தேசத்தின் ‘புதல்வன்’ - பாஜக எம்பி பிரக்யா தாக்கூர்

gandhiji-the-son-of-the-nation-like-many-other-icons-bjp-s-pragya-thakur-kicks-up-another-row

மகாத்மா காந்தி தேசத்தின் புதல்வன் என்று பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டவர் பிரக்யா சிங் தாக்கூர். இவர் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ‘நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’, ‘சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்ப்பவர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள்’, ‘கழிவறையை சுத்தம் செய்யவா எம்பி ஆனேன்’  உள்ளிட்ட கருத்துக்களை பேசியதற்காக விமர்சனங்களுக்கு ஆளானவர்.

இந்நிலையில், காந்தியைக் குறித்து புதிய கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். “காந்தியும் நாட்டின் புதல்வன். இந்த மண்ணின் மைந்தன். கடவுள் ராமர், மகரானா பிரதாப், சிவாஜி மகராஜ் உள்ளிட்டோரும் இந்தமண்ணின் மைந்தர்கள்தான். நாட்டிற்காக பணியாற்றியுள்ள அனைவருமே மதிக்கத்தக்கவர்கள்தான். அவர்களது வழியை நாங்கள் பின்பற்றுவோம்” என கூறியுள்ளார்.

                

காந்தி தேசத்தந்தை என எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், பிரக்யா தாக்கூர் தேசத்தின் புதல்வன் என்று கூறியுள்ளார். இவர் மத்திய அரசு சார்பில் மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரக்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close