[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

மத்தியப் பிரதேச நட்சத்திர விடுதியில் தீ விபத்து

fire-breaks-out-at-indore-based-hotal

மத்தியப் பிரதேசத்தில் ஐந்து அடுக்கு மாடிகள் கொண்ட நட்சத்திர விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. 

இந்தூரின் விஜய் நகர் பகுதியில் உள்ள கோல்டன் கேட் நட்சத்திர விடுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. விடுதியின் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல் வழியாக அருகில் இருந்த இடங்களுக்கும் பரவியுள்ளது. 

தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விடுதியில் தங்கியிருந்த பலர் வெளியேற்றப்பட்டதாகவும், ஒரு சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

எனினும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close