[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

இந்தியா கொடுத்த பதிலடியால் 10 பாக். வீரர்கள் உயிரிழப்பு  - பிபின் ராவத்

bibin-rawat-byte-about-india-army-attack

காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

ஜம்மு- காஷ்மீரில், போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியாக தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த சண்டையில், இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 7 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதுகுறித்து ராணுவத் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை தொடர்ந்து மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக, எல்லை தாண்டி பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர்.  ஜம்மு-காஷ்மீரில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்க ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தோம். காஷ்மீர் எல்லையில் இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. 10 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close