[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

தத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..!

indian-child-killed-by-london-couple-for-insurance-money

இன்சூரன்ஸ் பணத்திற்காக வளர்ப்பு மகனை திட்டமிட்டு கொலை செய்த லண்டன் தம்பதி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பண ஆசையால் கொலைகாரர்களாக ஆகியிருக்கிறார்கள், லண்டன் தம்பதியர்.

லண்டனைச் சேர்ந்த தம்பதியின் பண ஆசைக்கு, ஒரு பாவமும் அறியாத சிறுவனின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக, உலக சினிமாக்களை மிஞ்சிவிடும் வகையில் அவர்கள் தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியிருக்கிறது. குஜராத்தை பூர்வீகமாக கொண்ட கவல் ரய்ஜடாவும், ஆர்த்தி திர்-ரும் லண்டனில் வசித்து வருகின்றனர்.

2015-ஆம் ஆண்டு குஜராத்துக்கு வந்த இந்த தம்பதி, சிறுவனை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்படுவதாக, செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதைக் கண்டு கோபால் செனாஜி என்ற‌ 11 வயது சிறுவனின் குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அந்த விளம்பரம் கொடூரர்களின் சதிவலை என அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பெற்றோரை இழந்த கோபால் செனாஜி, மூத்த சகோதரியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

தங்களுடன் வறுமையில் வாழ்ந்துவரும் கோபால் செனாஜியை, லண்டன் தம்பதிக்கு தத்துக்கொடுத்தார் அவரது சகோதரி. சிறுவனை முறைப்படி தத்தெடுத்த லண்டன் தம்பதி, சில நாட்களிலேயே அவர் மீது 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். எல்லாம் சுமூகமாக முடிவடைந்துவிட்ட நிலையில், இங்கிருந்துதான் பிரச்னையே ஆரம்பித்திருக்கிறது. சிறுவனை தத்தெடுத்த தம்பதியர் உறுதியளித்ததன்படி, அவரை லண்டனுக்கு அழைத்துச் செல்லவில்லை.

சில முன்னேற்பாடுகளை செய்தபின்னர், சிறுவனை தங்களோடு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு லண்டன் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த கோபால் செனாஜி 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதைத் தடுக்க வந்த உறவினரும் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 1 கோடியே 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்பதாலேயே, லண்டன் தம்பதியர் திட்டமிட்டு சிறுவனை கொலை செய்துள்ளனர்.

பணத்துக்காக லண்டன் தம்பதி, தங்களது நண்பர் மூலம் கூலிப்படையை ஏவி சிறுவனை அநியாயமாக கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்காக லண்டன் தம்பதியை நாடு கடத்த இந்திய அரசு, இங்கிலாந்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், நீதிமன்ற வ‌சாரணையில் அவர்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பணம் பத்தும் செய்யும் என்றொரும் பழமொழியை விஞ்சிய இத்தம்பதியர், பணத்துக்காக கொலையையே செய்திருக்கிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close