[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு
  • BREAKING-NEWS கும்பகோணத்தில்‌ பாதாளச்சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

செடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்

man-caught-stealing-pot-plants-from-delhi-vertical-garden-apologises

அழகுக்காக அரசு அமைத்த மேம்பால பூந்தொட்டிகளை முதியவர் ஒருவர் திருடிக்கொண்டு ஓடும் காட்சி இணையத்தில் பரவியது. பின்னர் மன்னிப்புக்கோரிய முதியவர், தான் எடுத்த பூந்தொட்டிகளை அதே இடத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளார்

நகரங்களுக்கு நடுவே உள்ள மேம்பால தூண்களில் அரசு சார்பில் பூச்செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். சிறிய சிறிய பூந்தொட்டிகளில் பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதேபோல் டெல்லியில் வளர்க்கப்பட்ட மேம்பால பூந்தொட்டிகளை முதியவர் ஒருவர் திருடிச்செல்லும் வீடியோ இணையத்தில் பரவியது. திக்‌ஷித் என்பவர் தன் செல்போன் மூலம் எடுத்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். 

அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் மேம்பால பூந்தொட்டிகளை எடுத்து அதில் உள்ள மண்ணை கீழே கொட்டிவிட்டி பூந்தொட்டியை மட்டும் தன் பைகளில் வைத்துக்கொண்டு செல்கிறார். வீடியோ எடுக்கும் திக்‌ஷித்தைக் கண்டதும் அந்த முதியவர் வேகமாக ஓட்டமெடுக்கிறார். முதியவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். நகர தூய்மைக்காக, அரசுக்கு பொதுமக்கள் என்றும் ஆதரவாக இருக்கவேண்டுமே தவிர தொல்லை கொடுக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர்

இந்த வீடியோ வைரலானதை அடுத்து அந்த முதியவர் தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தான் எடுத்த பூந்தொட்டிகளை அதே இடத்தில் மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close